BREAKING NEWS

ஆடிப்பெருக்கு திருவிழா திருச்சி அம்மா மண்டபம் மற்றும் பணித்துறைகளில் குவிந்த பொதுமக்கள்.

ஆடிப்பெருக்கு திருவிழா திருச்சி அம்மா மண்டபம் மற்றும் பணித்துறைகளில் குவிந்த பொதுமக்கள்.

திருச்சி: காவிரித் தாய்க்கு நன்றி சொல்லும் விதமாக இயற்கை தாக்கிய நன்றி சொல்லும் விதமாக இந்த ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் புதுமண தம்பதிகள் தங்களது திருமண நாளை கொண்டாடும் காவிரி ஆற்றுக்கு வந்து திருமணமான நாட்கள் அணிந்த மாலைகளை காவிரி ஆற்றில் விட்டு விட்டு ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடுவது வழக்கம்.

 

கடந்த இரண்டு வருடமாக கொரோனா தொற்று பாதிப்பினால் விழா கொண்டாடாமல் காவிரி கரையோர பகுதிகளில் மக்கள் குவிய தடை செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், அய்யாளம்மன் படித்துறை மற்றும் காவிரி ஆற்றில் உள்ள பல்வேறு படித்துறை பகுதிகளிலும் திருச்சி, திருச்சி மாவட்டம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இன்று ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடி வருகின்றனர்.

 

 

ஆடிப்பெருக்கு விழாவில் ஏராளமான புதுமனை தம்பதியர் இன்று காவிரி ஆற்றில் காவிரி காவிரி தாயை வணங்கி ஆடிப்பெருக்கு விழாவை குடும்பத்தினருடன் கொண்டாடினர். ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர், மற்றும் பிளாஸ்டிக் படகுகளில் உதவியுடன் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )