BREAKING NEWS

ஆடி கிருத்திகையை முன்னிட்டு காட்பாடி செங்குட்டையில் அன்னதானம் வழங்கல்!  

ஆடி கிருத்திகையை முன்னிட்டு காட்பாடி செங்குட்டையில் அன்னதானம் வழங்கல்!   

வேலூர் மாவட்டம், காட்பாடி செங்குட்டை பகுதியில் திரௌபதி அம்மன் கோயில் எதிரில் சித்தூர்- கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சாமியானா பந்தல் அமைத்து ஆடி மாத கிருத்திகையை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த அன்னதானம் நண்பகல் 1 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இடைவிடாது ஒரு மணி நேரம் வழங்கப்பட்டது. இந்த நன்னாளில் முருக பக்தர்களுக்கு வேலூர் செங்குட்டை தொழிலதிபர் அச்சுதன் -அமுதா தம்பதியர் அன்னதானம் வழங்கினர்.

இந்த அன்னதானத்தில் கேசரி மற்றும் மதிய உணவு வெஜிடபிள் பிரியாணி, கத்தரிக்காய் கொஸ்து வழங்கப்பட்டது. சுமார் 1000க்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் வரிசையில் நின்று இந்த அன்னதானத்தை பெற்று உண்டு மகிழ்ந்து தங்களது பசியாற்றி கொண்டனர்.

இந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை அச்சுதன் தனது திருக்கரங்களால் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.

காவடியை கொண்டு சென்றவர்கள் கூட வரிசையில் நின்று அன்னதானம் வாங்கி உண்டு மகிழ்ழ்ந்தனர். இந்த ஆடி மாதத்தின் இரண்டாவது ஆடி கிருத்திகை இது என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS