ஆண்டிபட்டி அருகே வீட்டில் மான்கறி சமைத்தவர் கைது . இரண்டு கிலோ மான்கறி பறிமுதல்.
தேனிமாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு அருகே கோம்பைத்தொழு கிராமத்தைச் சேர்ந்த முருகன் மான்கறியை தனதுவீட்டில் சமைத்து வருவதாக மேகமலை வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத்தகவல் கிடைத்தது.
இந்ததகவலை தொடர்ந்து மேகமலை வனச்சரகர் அஜய் தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள், இன்று கோம்பைத்தொழு கிராமத்திற்கு விரைந்து சென்றனர், கிராமத்தில் இருந்த முருகனது வீட்டை சுற்றிவளைத்த வனத்துறையினர் அவரது வீட்டுக்குள் நுழைந்து சோதனையிட்டனர்.
அப்போது சமையல் அறையில் இரண்டுகிலோ மான்கறியை குக்கரில் சமைத்துக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து முருகனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மான்கறியை விலைக்கு வாங்கியதாகவும், ஒரு கிலோகறியின் விலை ரூபாய் 250 எனவும் , அடையாளம் தெரியாதநபர் விற்பனை செய்ததாகவும் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து முருகனை கைதுசெய்து மான்கறி வேட்டையில் சம்பந்தப்பட்டவர்கள் குறித்தும் விற்பனை செய்தவர்கள் குறித்தும் வனத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தீவிரவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர், சர்வசாதாரணமாக வேட்டையாட தடைசெய்யப்பட்ட மான்கறியை விலைக்கு வாங்கி இரவு உணவிற்கு வீட்டில் சமைத்த சம்பவம் ஆண்டிபட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.