ஆண்டிபட்டி நகரின் மையத்தில் அமைந்துள்ள பழமையான காளியம்மன்கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு அம்மன் சிங்கமுக வாகனத்தில் பட்டாடை அணிந்து எழுந்தருளி வீதி ஊர்வலம்

ஆண்டிபட்டி நகரின் மையத்தில் அமைந்துள்ள பழமையான காளியம்மன்கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு
அம்மன் சிங்கமுக வாகனத்தில் பட்டாடை அணிந்து எழுந்தருளி வீதி ஊர்வலம் வரும் நிகழ்ச்சி
வீதி தோறும் இரவு முழுவதும் காத்திருந்து பத்தடி
உயர நிலைமாலை சாத்தி காளியம்மனை வழிபட்ட ஏராளமான பொதுமக்கள்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமையான காளியம்மன் கோவில்
ஆண்டிப்பட்டி நகரின் முதன்மை கோவிலாக விளங்கி வருகிறது
காளியம்மன் கோவில் பங்குனித்திருவிழாவை முன்னிட்டு
சிங்கமுக வாகனத்தில் காளியம்மன் அமர வைக்கப்பட்டு விளக்குகளால் வாகனம் அலங்கரிக்கப்பட்டு
ஆண்டிப்பட்டி நகரில் உள்ள அனைத்து
வீதிகள் வழியாகவும் விடியும் வரை அம்மன் வீதி ஊர்வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது
சிங்கமுக வாகனத்தில் காளியம்மனை வழிபட வீதி தோறும் இரவு முழுவதும் கடைகள் வீடுகளின் முன்பு நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள்
பத்தடி உயரமுள்ள நிலமாலையை காளியம்மனுக்கு சாத்தி வழிபட்டனர்
ஆண்டிபட்டி நகரில்
இரவு 9 மணிக்கு துவங்கி விடியும் வரை நடைபெற்ற இந்த காளியம்மன் வீதி ஊர்வல நிகழ்ச்சியில்
காளியம்மனுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள்
நடைபெற்றது