BREAKING NEWS

ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பாரத் பொறியியல் கல்லூரிகள் 22 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது
விழாவிற்கு பாரத் நிகேதன் கல்வி குழும தலைவர் டாக்டர் மோகன் தலைமை தாங்கினார்
கல்லூரி முதல்வர் அருள்குமார் வரவேற்புரை ஆற்றினார்
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி முதல்வர் பழனிநாதராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்
கணினி அறிவியல் , சிவில் , கம்ப்யூட்டர் சயின்ஸ் , மெக்கானிக்கல் , எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் , உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளில் பயின்று தேர்ச்சி பெற்ற 220 மாணவ மாணவிகள் பட்டங்களை பட்டனர்
இறுதி ஆண்டு படிக்கும்போது திருமணம் முடித்த ஒரு சில மாணவ , மாணவியர்கள் தங்களது துணைவர் மற்றும் குழந்தையுடன் வந்து பட்டம் பெற்று மகிழ்ச்சியுடன் சென்றனர்
விழாவில் கல்லூரி நிர்வாகிகள் , பேராசிரியர்கள் , துணைப் பேராசிரியர்கள் , மாணவ மாணவிகள் , அவர்களின் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS