ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் சார்பாக 62 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா.
62 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடுகபாளையம் கிராமத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் சார்பாக 62 நபர்களுக்கு இரண்டு சென்ட் இலவச வீட்டு மனை பட்டாவினை தமிழக ஆதிதிராவிடர்நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பயனாளிகளுக்கு வழங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் வினித் வருவாய் கோட்டாட்சியர் குமரேசன் வட்டாட்சியர் ஜெகஜோ மற்றும் திமுக மாவட்ட செயலாளர் பத்மநாபன் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன் தாராபுரம் நகர செயலாளர் முருகானந்தம் துணைச் செயலாளர் கமலக்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES திருப்பூர்
TAGS அமைச்சர் கயல்விழி செல்வராஜ்ஆதிதிராவிடர்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்தாராபுரம்தாராபுரம் சட்டமன்ற தொகுதிதிருப்பூர் மாவட்டம்பழங்குடியினர்மாவட்ட ஆட்சித் தலைவர் வினித்முக்கிய செய்திகள்