BREAKING NEWS

ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளை பொதுக்கல்வித்துறையோடு இணைப்பதை கைவிடக்கோரி” அனைத்துக்கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளை பொதுக்கல்வித்துறையோடு இணைப்பதை கைவிடக்கோரி” அனைத்துக்கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளை பொதுக்கல்வித்துறையோடு இணைப்பதை கைவிடக்கோரி அனைத்துக்கட்சியின் ஆர்ப்பாட்டம் நடந்தது.

 

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு லோக் ஜனசக்தி மாநில பொதுச்செயலாளர் ஓவியர் ஆனந்த்ன், தலைமை தாங்கினார் மாவட்ட தலைவர்கள் தனபால், ராமர், மாவட்ட பொதுச் செயலாளர் துரை எழிலன்,மாவட்ட மாணவர் அணி தலைவர் முருகன், மாவட்ட இளைஞரணி தலைவர் முனியப்பிள்ளை, மாவட்ட மகளிர் அணி தலைவி அழகம்மாள், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

ஆதி அறக்கட்டளை சேப்பாக்கம் பிரகாஷ்,வரவேற்றார்.மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்துக்கட்சி யின் தலைவர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் திருமாறன், மங்காபிள்ளை, பெரு. வெங்கடேசன், எம்.ஏ.டி.அர்ச்சுணன், முனுசாமி, பழனிஆண்டவர், ஆறுமுகம்,செல்வராஜ், ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

 

இதில் ஆதிதிராவிட நலத்துறைப் பள்ளிகளை பொதுக்கல்வித்துறையோடு இணைப்பதைக் கைவிட வேண்டும். ஆதிதிராவிட நல பள்ளிகளை மேலாண்மை செய்திட பொதுக்கல்வித்துறையைப் போன்று தனிக்கல்வித் துறை உருவாக்கிடவும்.

ஆதிதிராவிடப் நலத்திட்டங்களை நடைமுறைப் படுத்துவதில் வருவாய் துறை தலையிடுவதைக் கைவிட்டு முற்றிலும் தனி நிர்வாகத்தை உருவாக்கிட உத்திரவிட வேண்டும்.
ஆதிதிராவிடர்களுக்கு தரப்படும் மத்திய அரசின் சிறப்பு உட்கூறுத்திட்ட நிதிகள் முழுவதையும் ஆதிதிராவிடர்களின் நல மேம்பாட்டிற்கு மட்டுமே செலவிட வேண்டும்.

ஆதிதிராவிடர்களின் நலத்திட்டங்களுக்கு வழங்கப்படும் நிதிகளை பொதுத்திட்டங்களுக்கு செலவிடுவதைக் கைவிட வேண்டும். ஆதிதிராவிட மக்களுக்கென்று ஒதுக்கீடு செய்யப்படும் நிதிகளை செலவிட தனி பட்ஜெட் போடும் நடைமுறையைக் கொண்டு வரவேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துக் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டம் முடிவில் தமிழ்நாடு விவசாய சங்கம் நிர்வாகி சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

CATEGORIES
TAGS