ஆத்தூர் அருகே கல்பகனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைத்திறன் திருவிழா.

சேலம் மாவட்டம்,
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு இயக்கம் சார்பில் அரசு பள்ளிகளில் மாணவ , மாணவிகளுக்கான திறன் மேம்பாட்டை வெளிப்படுத்தும் வகையிலும், மன அழுத்தத்தை போக்கும் விதமாக கலைத்திருவிழா நிகழ்ச்சி ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை இன்று தமிழக முழுவதும் அரசு பள்ளிகளில் நடைபெற்று வருகிறது.
அதைத் தொடர்ந்து சேலம் மாவட்டம் ஆத்தூர் கல்பகனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்குக்கான கலைத்திறன் திருவிழா போட்டி நடைபெற்றது.
இதில் அப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் தங்களது திறனை வெளிப்படுத்தும் வகையில் கவிதை போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி, கோலாட்டம், சிலம்பாட்டம், நடனம், கலை நிகழ்ச்சி உள்ளிட்ட மாறுபட்ட கலை நிகழ்ச்சிகள் ஒவ்வொரு மாணவர்களும் திறன்பட நிகழ்த்தி காட்டினார்.
மேலும் கலைத் திருவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்களது திறனை வெளிப்படுத்திய மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது. மேலும் மாவட்ட அளவிலான தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு மாவட்ட கல்வித்துறை சார்பில் சிறந்த பரிசுகளும் வழங்கப்பட உள்ளனர்.
நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவ மாணவிகளும் ஆசிரியர் பெருமக்களும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் உறுப்பினர்கள்,ஊராட்சிமன்ற துணை தலைவர்,மற்றும் பொதுமக்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.