ஆத்தூர் அருகே சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உடல் நலக்குறைவால் உயிர் இழப்பு.
ஆத்தூர் அருகே சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உடல் நலக்குறைவால் உயிர் இழப்பு,21 குண்டுகள் முழுங்க அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம், காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்பு.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்பகனூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் மணிவேல் இவர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக தற்போது வீரகனூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த நிலையில் அவருக்கு சில தினங்களாக உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்தார்.
இதனையடுத்து அவரது சொந்த ஊரான கல்பகனூரில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு ஏராளமான காவல்துறை உயர் அதிகாரிகளும் காவல்துறையினரும் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் இன்று மாலை 21 குண்டு முழங்க அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது,இதில் காவல்துறை உயர் அதிகாரிகளும் ஏராளமான காவல் துறையினரும் பங்கேற்றனர்.