BREAKING NEWS

ஆத்தூர் அருகே பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன்  12-ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

ஆத்தூர் அருகே பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன்   12-ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய 12-ம் ஆண்டு மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 11-ஆம் தேதி மஹா கணபதி ஹோமம்,

 

 

மகாலட்சுமி ஹோமம் தட பூஜை கோ பூஜை நவகிரக ஹோமம் கோபுர கலச பிரதிஷ்டை யந்திர பிரதிஷ்டை முகூர்த்தக்கால் நடுதல் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

 

 

அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் யாகசாலை பூஜைகள் நடைபெற்று இன்று காலை இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் புண்ணியஸ்தலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீருக்கு பூஜை, கோ பூஜை, யாக பூஜை, திரவிய ஹோமம் பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்ற பின்னர் கலசங்களை மேளதாளங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்து கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

 

 

மேலும் அங்கு திரண்டு இருந்த பக்தர்களுக்கு புனித நீரை தெளித்தனர் பின்னர் ஸ்ரீ மகா மாரியம்மன் சுவாமிக்கு தீர்த்தக் கலசங்களில் இருந்த புனித நீரை ஊற்றி மாரியம்மன் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஸ்ரீ மகா மாரியம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூஜைகளும் அபிஷேகமும் தீபாரத்தனையும் நடைபெற்றது, இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

 

மேலும் பக்தர்கள் அனைவருக்கும் விழா குழு சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )