BREAKING NEWS

ஆத்தூர்- சித்தையன் கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக ஆத்தூர் ஒன்றிய செயலாளர் ராமன் தலைமையில் பூமி பூஜை நிகழ்வு.

ஆத்தூர்- சித்தையன் கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக ஆத்தூர் ஒன்றிய செயலாளர் ராமன் தலைமையில் பூமி பூஜை நிகழ்வு.

மாண்புமிகு தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க. தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஜயா ஐ.பெரியசாமி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ .பெ செந்தில்குமார் அவர்களின் சீரிய முயற்சியால் இன்று திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சித்தையன் கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட அரசு துணை சுகாதார நிலையம் அருகில் பயணியர் நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூஜையும், சித்தையன் கோட்டை பேருந்து நிலையம் கிளை நூலகம் அருகில் கலைஞர் நூற்றாண்டு துணை நூலகம் கட்டுவதற்கான பூமி பூஜையும், நான்காவது வார்டு பகவதி அம்மன் கோவில் அருகில் நாடக மேடை கட்டுவதற்கான பூமி பூஜை ஆத்தூர் ஒன்றிய செயலாளர் ராமன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உடன் சித்தையன் கோட்டை பேரூராட்சி தலைவர் போதும் பொண்ணு முரளி, துணைத் தலைவர் ஜாகிர் உசேன், செயல் அலுவலர் சிவக்குமார், மாவட்ட சிறுபான்மையினர் நல அமைப்பாளர் ரபிக் மைதீன், வக்கீல் செல்ல மரக்காயர், நகரச் செயலாளர் சக்திவேல், பேரூர் கழக இளையரணி அமைப்பாளர் முகமது ரபிக், பொருளாளர் ஜெயராமன், பேரூர் கழக துணைச் செயலாளர் அலாவுதீன், அரசு ஒப்பந்தக்காரர் செல்லமுத்து, மற்றும் வார்டு கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS