ஆந்திரா பகுதியைச் சேர்ந்த ஆனந்த் வயது 20 என்ற வாலிபர் இருசக்கர வாகன விபத்தில் மூலைசாவு ஏற்பட்டதையடுத்து உடல் உறுப்புகள் தானம்.
யானைமலை ஆந்திரா பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (20) வயது வாலிபர் இவர் சித்தூர் பகுதியை சேர்ந்தவர் அமரராஜா பேட்டரி கம்பெனியில் சித்தூரில் பணிபுரிந்து வந்தார்- 12 6- 23 அன்று திங்கட்கிழமை இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது மற்றொரு இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்து ஆந்திரா மாநிலம் பங்கார பாளையம் பகுதியில் நடந்தது அதே நாள் 12 -6- 23 அன்று CMC -க்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் ஆனால் இவருக்கு அடுத்த நாள் இரவு சுமார் 9 மணி அளவில் மூளை சாவு ஏற்பட்டதாக டாக்டர்களால் தீர்மானிக்கப்பட்டது.
இவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு குடும்பத்தினர் முன்வந்துள்ளனர் இருதயத்தையும் நுரையிரலை எம்ஜி எம் மற்றும் அப்பல்லோ ஆஸ்பத்திரிகள் மற்றும் காவேரி ஹாஸ்பிடல் சென்னை ஆகிய மூன்றும் மருத்துவமனைகளுக்கு அனுப்பபட்டது.
கல்லீரலை சிஎம்சி ராணிப்பேட்டை மருத்துவமனையிலும் ஒரு சிறுநீரகத்தை சிஎம்சி ராணிபேட்டையிலும் மற்றொரு சிறுநீரகத்தை ஏம்ஸ் அல்லது மியாட் மற்றும் அப்போலோ ஆஸ்பத்திரி சென்னை அவர்கள் எடுத்துக் கொள்கிறதாக தீர்மானித்துள்ளனர் கண்கள் இன்னும் தீர்மானிக்க வில்லை நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.