ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழக பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் கள் கடத்தி வந்த மூவர் கைது!

வேலூர் மாவட்டம்; ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழக பகுதியான வேலூர் மாவட்டம், காட்பாடிக்கு இருசக்கர வாகனத்தில் கள் கடத்தி வந்த மூவரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி போலீசார் கிறிஸ்டியான்பேட்டை பகுதியில் வாகன தணிக்கையில் கடந்த 18ம் தேதி ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகப் பகுதியான வேலூர் மாவட்டத்தை நோக்கி வந்த இருசக்கர வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இந்நிலையில் அவர்களது வாகனங்களை போலீசார் சோதனை செய்த போது 15 லிட்டர் கள் கடத்திவரப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் வேலூர் கஸ்பா பகுதியை சேர்ந்த நாகேஷ் மகன் மதன்குமார் (38), சங்கர் மகன் விஷ்வா(30), முரளி மகன் வம்சி கிருஷ்ணன்(28), என்பது தெரிய வந்தது. இவர்கள் மூன்று பேரையும் கைது செய்து வேலூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாரிடம் காட்பாடி போலீஸார் ஒப்படைத்தனர்.
அவர்கள் விசாரணை நடத்தி தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கள்ளை கடத்தி வந்த குற்றத்துக்காக அவர்கள் மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
செய்தி ஆசிரியர் ச.வாசுதேவன்