ஆபரேஷன் நியூ லைஃப் மற்றும் பிச்சைக்காரர்களின் மறுவாழ்வு திட்டத்தின் கீழ், அவர்களுக்கு அடிப்படை தேவையான பொருட்கள் வழங்கிய திருப்பத்தூர் காவல் கண்காணிப்பாளர்.
திருப்பத்தூர் மாவட்டம்,
தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் முனைவர்.செ.சைலேந்திரபாபு., இ.கா.ப, அவர்களின் உத்திரவின் பேரில், ஆபரேஷன் நியூ லைஃப் மற்றும் பிச்சைக்காரர்களின் மறுவாழ்வு திட்டத்தின் கீழ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.K.S.பாலகிருஷ்ணன்.,BVSc, அவர்களின் அறிவுறுத்தலின் படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில்,.
(03.12.2022) மாவட்டம் முழுவதும் 28 பிச்சைக்காரர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு அடிப்படை தேவையான உணவு, போர்வை போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு, 17 பிச்சைக்காரர்கள் வாணியம்பாடி சரணாலயம் கருணை இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
CATEGORIES திருப்பத்தூர்
TAGS ஆபரேஷன் நியூ லைஃப்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருப்பத்தூர் மாவட்டம்பிச்சைக்காரர்களின் மறுவாழ்வுமுக்கிய செய்திகள்வாணியம்பாடி சரணாலயம் கருணை இல்லம்