ஆம்பூர் அருகே கோவில் கட்டிடத்தை இடிக்க ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வட்டார வளர்ச்சி அலுவலர் சிறைப்பிடிப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடகரை கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் கிடைத்த அம்மன் சிலை ஒன்றை அதே இடத்தில் பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பி கிராம மக்கள் வழிபாடு செய்து வரும் நிலையில் வடகரை கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ள இடத்தில் சுமார் 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகம், அங்கன் வாடி கட்டிடம் அமைக்க அரசு நிதி ஒதுக்கியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கோவில் இடத்தை விட்டு விட்டு அருகே உள்ள இடத்தில் கட்டிடத்தை கட்டிகொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கும் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் இன்று காலை அப்பகுதிக்கு வந்த வருவாய் துறை அதிகாரிகள் கோவில் கட்டிடத்தில் மின் இணைப்பை துண்டித்து கட்டிடத்தை ஜேசிபி மூலம் இடிக்க முயன்றுள்ளனர்.,
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் மக்கள் திரண்டு வாக்குவாதம் செய்து வந்த நிலையில் பேச்சுவார்த்தைக்காக வந்த அதிகாரிகள் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை பேசிக் கொண்டிருந்த போது ஆத்திரமடைந்த கிராம மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலரின் வாகனத்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.,
இது குறித்து தகவல் அறிந்து காவல்துறையினர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்., மேலும் கோவில் கட்டிடத்தை இடிக்க பொதுமக்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் எனவும் அப்படி அந்த இடத்தில் தான் அம்மன் கோவில் இருக்க வேண்டும் என்றால் அதை அம்மனே வந்து சொல்லட்டுமே என காவல் ஆய்வாளர் யுவராணி கிராம மக்களிடம் தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட முயன்றார்.
அப்போது திடீரென கோவில் பூசாரி வெங்கடேசனுக்கு அருள் வந்து ஆடினார் தற்போது கோவில் அமைந்துள்ள இடத்தை விட்டு மற்ற இடத்தில் என்ன கட்டிடம் வேண்டுமானாலும் கட்டி கொள்ளுங்கள்.,இந்த இடத்தில் தான் நான் குடியிருக்க விரும்புகிரென் என்னை இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டாம் என தெரிவித்தார்.
அதிகாரிகள் கோவில் இடிக்கும் முயற்சியை கைவிட்டு சென்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
