ஆம்பூர் அருகே 50 ஆண்டுகளுக்கு மேலாக இருளில் வாழ்ந்து வரும் இருளர் இன மக்கள்; அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தவித்து வரும் மக்கள் கண்டு கொள்ளுமா? தமிழக அரசு

ஆம்பூர் அருகே 50 ஆண்டுகளுக்கு மேலாக இருளில் வாழ்ந்து வரும் இருளர் இன மக்கள் சாலை வசதி குடிநீர், இருளர் இன சான்றிதழ் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தவித்து வரும் மக்கள் கண்டு கொள்ளுமா? தமிழக அரசு
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் ஊராட்சிக்குட்பட்ட கே கே நகர் இருளர் வட்டம் பகுதியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக 15 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 60க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
மலையடிவாரத்தில் எந்தவித அடிப்படை வசதி இல்லாமல் மின்சார வசதி கூட இல்லாமல் இருளில் வாழ்ந்து வரும் அப்பகுதி மக்களுக்கு இருளர் சான்றிதழ், வீட்டுமனை பட்டா, சாலை வசதி, குடிநீர் வசதி, மின் இணைப்பு வசதி செய்து தரக்கோரி அரசு அதிகாரிகளிடம் பல முறை புகார் மனு அளித்தும் தங்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காததால்,
இரவு நேரங்களில் மின்விளக்கு வசதி இல்லாத காரணத்தால் காட்டு பகுதியில் இருப்பதால் விஷப் பூச்சிகள், பாம்பு, தேள் இவ்வகை பூச்சிகள் கடித்து விடும் என்ற அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும்,
மழைக் காலங்களில் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் தங்களின் குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட எதிர்கால நலனை கருத்தில் கொண்டு இருளர் இன சான்றிதழ் வழங்கியும் அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தரக்கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.