ஆருத்ரா தரிசனம் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி சாமி தரிசனம்.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ரோடு, எஸ்.பெரியபாளையத்திலுள்ள ஆவுடைநாயகி உடனமர் சுக்ரீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையும் முன்னிட்டு சிறப்பு யாக பூஜைகளும் திருக்கல்யாண உற்சவம் மற்றும் ஆருத்ரா தரிசனம் ஆகிவைகள் மிக விமரிசையாக நடைபெற்றது.
இதில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மாண்புமிகு கயல்விழி செல்வராஜ் அவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
அப்போது அமைச்சருக்கு கோவில் நிர்வாக கமிட்டி சார்பில் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
விழா கமிட்டி சார்பில் அமைச்சருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருக்கல்யாண உற்சவத்தில் மூலவருக்கு சிறப்பு சீர் வரிசைகள் வைத்து சிறப்பு அபிேஷகம் அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றதை தொடர்ந்து இரவு வரை அன்னதானம் வழங்கப்பட்டது.
CATEGORIES திருப்பூர்
TAGS அரசியல்ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழிஆன்மிகம்ஆவுடைநாயகி உடனமர் சுக்ரீஸ்வரர் கோவில் ஆருத்ரா தரிசனம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருப்பூர் மாவட்டம்பெரியபாளையம்முக்கிய செய்திகள்