ஆர்.எஸ்.எஸ் கூடாரமாக ஆதீனங்கள் மாறக்கூடாது.. சிபிஎம் பாலகிருஷ்ணன் காட்டம்..

ஆர்எஸ்எஸ் கூடாரமாக ஆதீனங்கள் மாறக்கூடாது என்றும் கோவில்களை ஏன் அதீனங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வியெழுப்பியுள்ளார்.
ஆர்எஸ்எஸ் கூடாரமாக ஆதீனங்கள் மாறக்கூடாது என்றும் கோவில்களை ஏன் அதீனங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வியெழுப்பியுள்ளார்.மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆதினங்கள் அரசியல் பேசுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் முஸ்லிம்கள் தேச விரோதிகள் என்று பேசுவது எந்த வகையில் நியாயம். கோயிலில் அறநிலைத்துறை கொள்ளையடிக்கிறது. அங்கு தவறு நடக்கிறது என்பதெல்லாம் வரம்பு மீறிய பேச்சு என்று குற்றஞ்சாட்டினார்.
முன்னதாக நேற்று மதுரையில் பேசிய மதுரை ஆதீனம்,” தமிழ்நாட்டில் பண்பாடு கலாச்சாரமே கோவிலுக்குள் தான் உள்ளது. ஆன்மீகவாதிகள் அரசியல் பேசக்கூடாது என்று சொல்கிறார். நாங்கள் அரசியல் பேசாமல் வேறு யாரு பேசுவது? முதலில் அரசியல்வாதிகளுக்கு கோவிலில் என்ன வேலை..? என்று கேள்விகளை ஏழுப்பினார்.இந்துசமய அறநிலையத்துறை கோவிலிம் உண்டியலில் காசு போடாதீர்கள். அந்த பணம் முழுவதும் கோவிலுக்கு செல்வதில்லை என்று தெரிவித்தார்.
ஒரு கோவில் எப்படி தீட்டிதர்களுக்கு சொந்தமாக முடியும். அது மக்களுக்கு தான் சொந்தம் என்று தெரிவித்த அவர் சிதம்பர நடராஜர் கோவிலை அறநிலையத்துறை கட்டுப்பாடில் கொண்டு வர வேண்டும் என்றும் கூறினார். ஆதீனங்கள் ஆன்மீக பணியை மட்டும் தான் செய்ய வேண்டும். கோவில்களை ஏன் ஆதீனங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கேள்வியெழுப்பினார்.
பிரதமர் மோடிக்கு வக்காலத்து வாங்குபவர்களாக ஆதினங்கள் மாறிவிட்டனர் என்றும் ஒரு தலைபட்சமாக அவர்கள் பேசி வருகிறார்கள் என்றும் குறிப்பிட்டார். அதோடுமட்டுமல்லாமல், கோவில்கள் ஆதினங்கள் கட்டுப்பாட்டில் இருந்த போது ஏரளமான ஊழல்கள் நடந்ததுள்ளது எனவும் குற்றசாட்டினார். எனவே ஆர்எஸ்எஸ் கூடரமாக ஆதீனங்கள் மாறக்கூடாது என்று தெரிவித்தார்.இதனைத்தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் கருவில் இருக்கும் குழந்தைகள் ஆணா, பெண்ணா என ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டு வருகிறது. 17 வயது சிறுமியின் கரு முட்டை எடுத்து விற்பனை செய்தது அதிர்ச்சியளிக்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு விசாரணை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக நேற்று மதுரையில் பேசிய மதுரை ஆதீனம்,”தமிழ்நாட்டில் பண்பாடு கலாச்சாரமே கோவிலுக்குள் தான் உள்ளது. ஆன்மீகவாதிகள் அரசியல் பேசக்கூடாது என்று சொல்கிறார். நாங்கள் அரசியல் பேசாமல் வேறு யாரு பேசுவது? முதலில் அரசியல்வாதிகளுக்கு கோவிலில் என்ன வேலை..? என்று கேள்விகளை ஏழுப்பினார்.இந்துசமய அறநிலையத்துறை கோவிலிம் உண்டியலில் காசு போடாதீர்கள். அந்த பணம் முழுவதும் கோவிலுக்கு செல்வதில்லை என்று தெரிவித்தார்.
