ஆற்காடு அருகே தொழிலாளியை தாக்கிய 4 பேர் கைது !!

ராணிப்பேட்டை ஆற்காடு அடுத்த கீழ்விஷாரம் பிரான்சாமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராமஜெயம் (வயது 32), கூலித் தொழிலாளி. இவருக்கும் திமிரி அடுத்த குப்பம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை, ஆற்காடு அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் உள்பட நான்கு பேருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று 4 பேரும் பிரான்சாமேடு பகுதிக்கு சென்று ராமஜெயத்திடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
தகராறு முற்றி ராமஜெயத்தை பலமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன்போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலை (26), அஜித்குமார் (23) மற்றும் 2 வாலிபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.