ஆற்காடு பகுதியில் பாலின சமத்துவம் குறித்து லோகோ வடிவில் நின்று தனியார் பள்ளி மாணவர்கள் சாதனை
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியில் இந்திய பல் மருத்துவர்கள் சங்கம் மற்றும் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பில் பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவர் பவளக்கொடி சரவணன் தலைமை தாங்கினார் இதில் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அறக்கட்டளை சார்ந்த ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்று GVC தனியார் பள்ளி மாணவர்கள் 1000 பேர் ஒன்றிணைந்து பாலின சமத்துவம் குறித்த அடையாள சின்னத்தை அனைவருக்கும் தெரிவிக்கும் விதமாக அதன் வடிவத்தை கழுகு கேமரா பார்வையில் பள்ளி மாணவர்கள் நின்று விழப்புணர்வு ஏற்படுத்தினர்கள்.
அதனைத்தொடர்ந்து சாதனை புரிந்த அனைத்து பள்ளி மாணவர்களுக்கு யூனிவர்சல் ஆக்ஸிவேர்ஸ் ஆஃப் ரெக்கார்டில் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு சான்றிதழை பெற்றனர்.
மேலும் இதுபோன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி சாதனை புரிந்த மாணவர்களுக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசினை வழங்கினார்கள்.
மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.