ஆலங்காயம் அடுத்த மதனாஞ்சேரி கிராமத்தில் புதிய நியாய விலைக் கடை திறப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் மேற்கு ஒன்றியம் மதனாஞ்சேரி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரு.9.60 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலைகடை கட்டிடத்தை ஜோலார்பேட்டை எம்.எல். ஏ தேவராஜ், ஆம்பூர் எம்.எல். ஏ வில்வநாதன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்களை வழங்கி தொடங்கி வைத்தனர்.
இதில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஞானவேலன், ஒன்றியக்குழுத் தலைவர் சங்கிதாபாரி,
ஒன்றிய குழு துணை தலைவர் பூபாலன், தலைமை பொதுகுழு உறுப்பினர் வி.எம்.பெருமாள், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
CATEGORIES திருப்பத்தூர்
TAGS Dmkஅரசியல்ஆலங்காயம் ஒன்றியம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருப்பத்தூர் மாவட்டம்புதிய நியாய விலைகடைமதனாஞ்சேரி கிராமம்முக்கிய செய்திகள்