BREAKING NEWS

ஆலங்காயம் மேற்கு ஒன்றியத்தில் ரூ.23 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்ட பூமி பூஜை. எம்.எல். ஏ வில்வநாதன்,மேற்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ் ஞான வேலன் ஆகியோர் பங்கேற்பு.

ஆலங்காயம் மேற்கு ஒன்றியத்தில் ரூ.23 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்ட பூமி பூஜை.  எம்.எல். ஏ வில்வநாதன்,மேற்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ் ஞான வேலன் ஆகியோர் பங்கேற்பு.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட மதனாஞ்சேரி கிராமத்தில் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டது. இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியானது தற்போது மிகவும் சிதிலமடைந்து காணப்படுவதாகும், பொதுமக்கள் இந்த நீர் தேக்க தொட்டியின் ஆபத்தான நிலையை கண்டு அச்சமடைந்துள்ளதாகவும் எனவே அப்பகுதியில் புதிய மேல்நீர் தேக்க தொட்டி அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.

 

இந்த கோரிக்கையின் பேரில், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், அப்பகுதியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க 23 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி ஆலங்காயம் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ் ஞானவேலன் தலைமையில் நடைபெற்றது. இந்த பூமி பூஜை நிகழ்ச்சிக்கு ஆலங்காயம் ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரி, ஒன்றிய குழு துணை தலைவர் பூபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக ஆம்பூர் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் கலந்து கொண்டு மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணியினை பூமி பூஜையிட்டு துவக்கி வைத்தார். இந்த பூமி பூஜை நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் அசோகன்,தலைமை பொதுக்குழு உறுப்பினர் வி.எம்.பெருமாள்,ராமநாதன்,வி.ஜி.அன்பு,தசரதன் மெக்கானிக் நாகராஜி, , அரசு அலுவலர்கள், முக்கிய திமுக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS