ஆலங்குளத்தில் வருமான வரி முன்கூட்டியே கணக்கிட்டு செலுத்துவது தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் ; ஆலங்குளம் நகர வியாபாரி சங்கம் மற்றும் திருநெல்வேலி வருமான வரி அலுவலகம் இணைந்து நடத்திய இந்த முகாமிற்கு ஆலங்குளம் நகர வியாபாரிகள் சங்கத் தலைவர் அ.சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். செயலர் முத்துவேல் முன்னிலை வகித்தார்.
வருமான வரி அதிகாரிகள் சூரிய குமாரி, ராஜபாண்டியன் ஆகியோர் முன்கூட்டியே வரி செலுத்துவது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கினர். இதில் திரளான வியாபாரிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். வியாபாரிகள் சங்கத் துணைத் தலைவர் வேலுச்சாமி வரவேற்றார்.
பொருளாளர் குழந்தைவேல் நன்றி கூறினார். தென்காசி வரி ஆலோசகர் த. நாராயணன், திருநெல்வேலி வருமான வரித்துறை ஆய்வாளர் செல்வம், டேவிட்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
CATEGORIES தென்காசி
TAGS ஆலங்குளம் நகர வியாபாரி சங்கம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருநெல்வேலி வருமான வரி அலுவலகம்தென்காசி மாவட்டம்முக்கிய செய்திகள்