இங்கிலாந்து இளவரசி இறந்தது அடுத்து நான்கு நாட்கள் துக்க மனுசரிக்க படுகிறது, அந்த காலி இடத்தை வேண்டுமானால் எடப்பாடியும் ஜெயக்குமாறும் நிரப்பலாமே தவிர இங்கு ஒன்றும் அவர்களால் செய்ய முடியாது.

தஞ்சாவூர், இங்கிலாந்து இளவரசி இறந்தது அடுத்து நான்கு நாட்கள் துக்க மனுசரிக்க படுகிறது. நான்கு நாட்களுக்கு பிறகு சென்று அந்த காலி இடத்தை வேண்டுமானால் எடப்பாடியும் ஜெயக்குமாறும் நிரப்பலாமே தவிர இங்கு ஒன்றும் அவர்களால் செய்ய முடியாது.
எடப்பாடி பழனிச்சாமி அதிமுக அலுவலகத்திற்குள் சென்றது தவறு. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் , ஈ.பி.எஸ் இணை ஒருங்கிணைப்பாளர் இல்லை இது தொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக அலுவலகத்தின் உரிமையாளர், அதிகாரம் பெற்றவர் ஓபிஎஸ். அவரை கேட்காமல் சென்றது தவறு இது குறித்து டிஜிபியிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை கேட்காமல் திறந்து வீட்டில் நுழைவது போல் நுழைந்தது தவறு. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது இவர் எப்படி உள்ளே சென்றார்

அதிமுக அலுவலகத்திற்கு செல்வதற்காக பாதுகாப்பு கேட்டோமே தவிர ஓபிஎஸ் கழகப் பணிகளை மேற்கொள்ள எப்பொழுது வேண்டுமானாலும் உள்ளே செல்வார், நாங்களும் செல்வோம். யாராலும் தடுக்க முடியாது – என புகழேந்தி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
