இடையக்கோட்டையில் அப்பாரத்தை அம்மன் கோவில் 79ம் ஆண்டு வருடாந்திர விழா.
திண்டுக்கல் மாவட்டம்; ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டையில் அப்பாரத்தை அம்மன் கோவில் 79ம் ஆண்டு வருடாந்திர விழாயையொட்டி வைகாசி திருவிழாவையையொட்டி கொடுமுடி காவேரி ஆற்றில் இருந்து கொண்டுவரப்பட்டு புனிதநீர் செலுத்தி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
விழாவையொட்டி கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அம்மன் கரகம் அலங்கரித்து கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
நேற்று அம்மனுக்கு பால் அபிஷேகம், புனிதநீர் தீர்த்தம் செலுத்துதல், மாவிளக்கு எடுத்தல், உச்சிகால பூஜை, குத்துவிளக்கு பூஜை, ராக்கால பூஜை நடந்தப்பட்டது.
இன்று காலை முளைப்பாரி ஊர்வலத்தை தொடர்ந்து மஞ்சல் நீராட்டுடன் அம்மன் பூஞ்சோலை கொண்டு செல்லப்பட்டது.
விழாவில் ஒட்டன்சத்திரம், பழனி, வேடசந்தூர், நத்தம், சென்னை, கரூர், சேலம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏரளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.