இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கல்வி கடன் தராததை குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியரிடத்தில் தந்தை விண்ணப்பம் மனு!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பொகலூர் கிராமத்தைச் சேர்ந்த ர.கௌதம் அவர்களின் தந்தை ரமேஷ் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன் மகனுக்காக கல்வி கடன் கேட்டு விண்ணப்பம் என்னுடைய மகன் ஆர்.கௌதம். பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது தமிழ்நாட்டில் உள்ள தனியார் கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் . தன் மகனுக்காக வளத்தூர் கிராமத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கல்வி கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளேன்.
வங்கி மேலாளர் அவர்கள் கல்வி கடன் கொடுப்பதில்லை உங்களுடைய மனுவை நிராகரித்து விட்டேன் என்று சொல்லிவிட்டார் தற்போது என்னுடைய மகன் முதலாம் ஆண்டு கல்வி கட்டணத்தை முழுவதையும் கஷ்டப்பட்டு செலுத்தி விட்டேன் இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு கல்வி கடன் வழங்க வேண்டும் என்று மறுபடியும் வங்கி மேலாளரை அணுகினேன். வங்கி மேலாளர்கள் அவர்கள் மண்டல அலுவலகத்திலிருந்து உங்கள் மனுக்களை நிராகரித்துவிட்டார் அதனால் உங்களுக்கு கல்வி கடன் கொடுக்க முடியாது என்று என்னை அவமானப்படுத்தி அனுப்பி விட்டார்.
என்னுடைய குடும்ப சூழ்நிலைகளை தெரிவித்தும் கல்வி கடன் கொடுக்க மாட்டேன் என்று மீண்டும் வலியுறுத்தி இருக்கிறார் தற்போது என்னுடைய மகன் படிப்பு பாதையில் கேள்விக்குறியாக இருக்கிறது அதைத் தொடர்ந்து இன்று மக்கள் குறை தீர்க்கும் முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் குமரவேல் பாண்டியன் அவர்களிடத்தில் மனு கொடுத்து தன் மகனுடைய கல்வி கட்டணத்தை கொடுக்க வலியுறுத்தி இருக்கிறார்.
மனுவைப் பெற்றுக் கொண்ட அரசு அதிகாரி உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கல்வி கடன் வழங்கப் பரிந்துரை செய்வதாகும் உறுதியளித்தார்.