இந்தியாவின் வளர்ச்சியில் 10% GDP சுற்றுலாத்துறை மூலமும் அன்னிய செலாவணியாக 2 லட்சத்து 11 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது என்று இந்திய சுற்றுலா தென் மண்டல இயக்குனர் முகமது பாருக் தகவல்.

தஞ்சாவூர்,
மத்திய அரசு சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தஞ்சையில் செப்டம்பர் 27 உலக சுற்றுலா தினம், தூய்மை விழிப்புணர்வு இயக்கம் (ஸ்வச்தா பக்வாடா) 75வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா ஆகியவற்றை கொண்டாடும் வகையில் முப்பெரும் விழா நடைபெற்றது.

இதனையடுத்து தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் தூய்மை பணி நடைபெற்றது மேலும் தஞ்சை பெரிய கோவில் வளாகத்திலிருந்து அரண்மனை வளாகம் வரை கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது.

இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இந்திய சுற்றுலா தென் மண்டல இயக்குனர் முகமது பாருக் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பின்னர் சுற்றுலா இயக்குனர் கூறும்போது இந்தியாவில் அதிகப்படியான வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடமாக தமிழகம் உள்ளது என்றும் 2019 ஆண்டின் கணக்குப்படி 70 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், 49 கோடியே 50 லட்சம் உள்நாட்டு சுற்றுலா பயணிகளும் தமிழகத்திற்கு வந்து சென்றுள்ளதாகவும்,
இந்தியாவின் வளர்ச்சியில் 10% GDP சுற்றுலாத்துறை மூலமும் அன்னிய செலாவணியாக 2 லட்சத்து 11 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது எனவும்,

8 கோடியே 75 லட்சம் பேர் சுற்றுலாத் துறை மூலமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் இந்திய சுற்றுலா தகவல் தொடர்பு அலுவலர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
