இந்தியாவில் உள்ள ஜெயின் மதத்தினரின் புண்ணிய தலங்களை காப்பாற்ற கோரி ஜெயின் சமூகத்தினர் காஞ்சிபுரத்தில் கடை அடைப்பு போராட்டம்.

காஞ்சிபுரம்,
இந்தியாவில் உள்ள ஜெயின் மதத்தினரின் புண்ணிய தலங்களான கல்கத்தாவில் உள்ள சமயசிகர்ஜி, அகமதாபாத்தில் உள்ள பாலிதானா, சோம்நாத்தில் உள்ள கிரிநாத், ஆகிய மூன்று புனித தலங்களை ஆக்கிரமிப்பு செய்வதை கண்டித்தும்,
புண்ணிய தலங்களை மத்திய அரசு காப்பாற்ற கோரியும், நாடு முழுவதும் உள்ள ஜெயின் சமூகத்தினர் இன்று போராட்டம் செய்து வரு கின்றனர்.
அதன்படி காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட கம்மாளர் தெரு, நெல்லுக்கார தெரு, எண்ணக்கார தெரு, சேக்குப்பேட்டை, காந்தி சாலை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வணிக நிறுவனங்களையும் கடைகளையும் நடத்தி வரும் ஜெயின் சமூகத்தினர் புண்ணிய தலங்களை மத்திய அரசு காப்பாற்ற வலியுறுத்தி, தங்களது கடைகளை இன்று ஒரு நாள் அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
CATEGORIES காஞ்சிபுரம்
TAGS காஞ்சிபுரம் மாநகராட்சிகாஞ்சிபுரம் மாவட்டம்ஜெயின் மதம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்