BREAKING NEWS

இந்திய அளவில் கோவாவில் நடைபெற்ற யோகாசன போட்டியில் 3600 வீரர்களில் படப்பை வீரர்கள் 11 பேரும் பதக்கங்கள் வென்று சாதனை.

இந்திய அளவில் கோவாவில் நடைபெற்ற யோகாசன போட்டியில் 3600 வீரர்களில் படப்பை வீரர்கள் 11 பேரும் பதக்கங்கள் வென்று சாதனை.

தாய்லாந்தில் உலக அளவில் நடைபெறும் யோகாசன போட்டியில் கலந்து கொள்ள தமிழக அரசிடம் உதவி கேட்கும் வீரர்கள்

 

கடந்த ஜனவரி 7 மற்றும் 8ஆம் தேதியில் கோவாவில் இரண்டு நாட்கள் நடைபெற்ற நாலாவது தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையிலான யோகாசனப் போட்டி நடைபெற்றது.

 

அதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 3600 க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

இதில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை BeFit Yoga and fitness அகாடமியை சேர்ந்த 11 மாணவ மாணவிகள் காமன்வெல்த் தடகல வீராங்கனை சொர்ண மாலதியின் தலைமையில் கலந்து கொண்டு 8தங்கப்பதக்கங்கள் மற்றும் 3வெள்ளி பதக்கங்களை வென்றனர்.

 

மேலும் அவர்கள் அனைவரும் தாய்லாந்து நாட்டில் நடைபெற உள்ள பன்னாட்டு அளவிலான யோகாசன போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.

இந்த 11 குழந்தைகளின் பெற்றோர்களும் குறைவான வருமானத்திற்கு தற்காலிக பணியை செய்து வருவதால் கோவாவில் நடைபெற்ற யோகாசனப் போட்டிக்கு தங்களுடைய குழந்தைகளை அனுப்புவதற்கு மிக சிரமத்தோடு அனுப்பி வைத்தனர்.

 

இப்பொழுது பன்னாட்டு அளவில் தாய்லாந்தில் நடைபெற உள்ள யோகாசனப் போட்டியில் கலந்து கொண்டால் 11 பேரும் முதல் இடத்தைப் பிடித்து தமிழகத்துக்கு பெருமை சேர்ப்பார்கள்.

ஆனால் இவர்களின் பெற்றோர்களிடத்தில் போதிய வசதி வாய்ப்பு இல்லாததால் இந்த குழந்தைகள் அனைவரும் தாய்லாந்துக்கு செல்வது கேள்விக்குறியாக உள்ளது.

ஆகவே தமிழக அரசு உதவி கரம் நீட்டினால் தாய்லாந்து சென்று நாங்கள் வென்று எங்கள் இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்ப்போம் என்று ஆர்வமுடன் கூறுகின்றனர்.

CATEGORIES
TAGS