இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய பேரவை கூட்டம்.

செய்தியாளர் க.கார்முகிலன்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் கட்டுமான தொழிலாளர்களுக்கான ஒன்றிய பேரவை கூட்டம் திருக்கடையூரில் நடைபெற்றது.
இக்கூட்டம் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் A.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.
A. ரவி, m.கண்ணையன், R. ரமேஷ், G. ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட குழு உறுப்பினர் K.குணசேகர் கட்டுமான தொழிலாளர்களை வரவேற்று பேசினார்.
மாவட்ட தலைவர் L.லட்சுமணன் துவக்க உரையாற்றினார். புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து மாவட்ட செயலாளர் P.மாரியப்பன் சிறப்புரை ஆற்றினார்.
பேரவையின் கோரிக்கையாக கட்டுமான தொழிலாளர்களின் நல வாரிய பயன்களை முழுமையாக வழங்கிடவும் நலவாரிய பதிவு பணிகளை எளிமையாக்கி நலவாரியம் மூலம் வழங்கப்படும் நான்கு லட்சம் மதிப்புள்ள வீடு கட்டும் திட்டத்தில் உள்ள கெடுபிடி முறைகளை கைவிடவும்,
நலவாரிய தொழிலாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிடவும்,
60 வயது கடந்த கட்டுமான தொழிலாளர்களுக்கு பென்ஷன் வழங்கிடவும்,
இடிந்து விடும் அரசு தொகுப்பு வீடுகளை புதுப்பித்துக் கொடுக்கவும்,
கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், கோரிக்கைகள் தீர்மானங்களாக பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
புதிய ஒன்றிய நிர்வாகிகள் ஒன்றிய தலைவராக A.உதயகுமார், ஒன்றிய செயலாளராக K.குணசேகர், ஒன்றிய பொருளாளராக A.ரவி, 12 பேர் கொண்ட புதிய ஒன்றிய குழு தேர்வு செய்யப்பட்டது.