BREAKING NEWS

இந்திய மாணவர் சங்கத்தின் 28 வது மயிலாடுதுறை மாவட்ட மாநாடு தரங்கம்பாடி சீகன்பால்கு ஆன்மீக மன்றத்தில் நடை பெற்றது.

இந்திய மாணவர் சங்கத்தின் 28 வது மயிலாடுதுறை மாவட்ட மாநாடு தரங்கம்பாடி சீகன்பால்கு ஆன்மீக மன்றத்தில் நடை பெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் 28 வது மயிலாடுதுறை மாவட்ட தரங்கம்பாடி சீகன்பால்கு ஆன்மீக மன்றத்தில் நடை பெற்றது.

 

மாநாட்டிற்கு முன்னதாக, கடைவீதியிலிருந்து நீட் தேர்வுக்கு எதிராக, பாலியல் வன்கொடுமைக்கு எதிராக, மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி துவங்கிடக் கோரி முழக்கங்களை எழுப்பியவாறு ஏராளமான மாணவர்கள் பேரணியாக புறப்பட்டு தரங்கம்பாடி நுழைவு வாயில், இராஜவீதி வழி யாக மாநாடு நடைபெற்ற அரங்கிற்கு வந்தடைந்தனர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் ப.மணிபாரதி சங்க கொடியினை ஏற்றி வைத்தார்.

 

 

மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரவீன் வரவேற்று பேசினார். அஞ்சலி தீர்மானத்தை சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் கே.கலைச்செல்வன் வாசித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.தீபிகா, மாவட்டக் குழு உறுப்பினர்கள் டி.தீபா, ஆர்.பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். AUT மாநில பொருளாளர் முனை திரு. A.சேவியர் செல்வக்குமார் அவர்கள் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.

 

 

ஸ்தாபன வேலையறிக்கையை மாவட்டச் செயலாளர் அமுல்காஸ்ட்ரோ வாசித்தார். மாநில துணைத்தலைவர் ப.மாரியப்பன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர். ரவீந்திரன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.வெண்ணிலா, வாலிபர் சங்க மாவட்ட துணை செயலாளர் ஐயப்பன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். சங்கத்தின் புதிய மாவட்டச் செயலாளராக அமுல்காஸ்ட்ரோ, மாவட்ட தலைவராக மணிபாரதி, துணை தலைவர்களாக மார்டீன், தீபாதுணை செயலாளர்களாக பிரவின், தவசி மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக பிர காஷ், தீபிகா, அபினேஷ் ஆகியோர் உள்ளடக்கிய 23 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது.

 

 

தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை அறிவித்து மாநிலத் தலைவர் ஏ.டீ.கண்ணன் நிறைவுரையாற்றினார். குத்தாலம் அரசு கலைக் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும். மயிலாடு துறை மாவட்டத்தில் சட்டம் மற்றும் மருத்துவக் கல்லூரி, தொழிற்பயிற்சி கல்லூரிகளை அமைக்க வேண்டும். தியாகி தில்லையாடி வள்ளியம்மை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும். மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கஞ்சா,மது விற்பனையை தடுக்க வேண்டும். வாடகை கட்டிடத்திலேயே பல ஆண்டு களாக செயல்படும் தரங்கம்பாடி வட்ட நூலகத்தை, பூட்டியே கிடக்கும் டேனிஷ் கவர்னர் மாளிகைக்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )