இந்து அறநிலையத்துறை சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
தேனி மாவட்டம் வீரபாண்டியில் அமைந்துள்ளது ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயில் சித்திரை திருவிழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் கெளமாரியம்மனை தரிசனம் செய்வர்.
இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் பக்தர்கள் தங்குவதற்கு ஏற்ப கோவிலின் அருகே ஒரு கோடியே 60 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள தரைத் தளம் மற்றும் முதல் தளத்தில் என 10 அறைகளுடன் கூடிய பக்தர்கள் தங்கும் விடுதி மற்றும் 3 கோடியே 40 லட்சம் மதிப்புடைய திருமண மண்டபத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்த திருமண மண்டபத்தில் தரைத் தளம், முதல் தளம் என 268 நபர்கள் பக்கேற்கக் கூடிய திருமணக்கூடம் மற்றும் 235 நபர்கள் அமர்ந்து உணவருந்தும் உணவுக்கூடமும் உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக அடிக்கல் நாட்டிய இந்த நிகழ்வில் தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் தேனி-சதிஸன்.