இந்து முன்னணி கன்னியாகுமரி மாவட்ட தலைவர் இந்து கோவில்கள் பாதுகாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகா திடல் ஊராட்சியில் புளி மூட்டு பத்திரகாளி அம்மன் கோவில் மற்றும் தாவு விளை இசக்கி அம்மன் கோயில் பல வருடங்களாக உள்ளது.
இதனை அழிக்க முயலும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் இந்துக்களின் வாழ்வுரிமை மற்றும் வழிபாட்டு உரிமையை பாதுகாக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடபட்டி ருந்தது.
இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் ஜெயராம் விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில செயலாளர் காளியப்பன் மாநகர தலைவர் நாஞ்சில் ராஜா பொதுச் செயலாளர் கார்கில் மணிகண்டன் பாரதிய ஜனதா கட்சி வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அட்வகேட் ரஜினிகாந்த் ஒன்றிய பொருளாளர் விஜய் மணி துணைத்தலைவர் மனோகரன் உள்ளாட்சி பிரிவு ஒன்றிய தலைவர் நாராயண மூர்த்தி செயலாளர் பார்த்திபன் மற்றும் ஊர்மக்கள் பெண்கள் என பலர் உடனி ருந்தனர்.
CATEGORIES கன்னியாகுமரி
TAGS அரசியல்இந்து கோவில்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்தாவு விளை இசக்கி அம்மன் கோயில்புளி மூட்டு பத்திரகாளி அம்மன் கோவில்முக்கிய செய்திகள்