BREAKING NEWS

இன்டஸ் டவர்ஸ் நிறுவனம் மற்றும் நீலகிரி மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஸ்மார்ட் வகுப்பறை திட்டத்தை இன்று உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா காணொளி காட்சி மூலமாக அறிமுகப்படுத்தி வைத்தார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாவனல்லா, முக்கட்டி, ஐயங்கொல்லி, கப்பாலா, பொன்னானி, தொரப்பள்ளி ஆகிய ஆறு அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலை பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் டிஜிட்டல் கருவிகளை வழங்கப்பட்டது.

இந்தியாவின் முன்னணி நிறுவனமான இண்டஸ் டவர்ஸ் லிமிடெட், அதன் முதன்மையான கார்ப்பரேட் சமூக பொறுப்பு (CSR) திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆறு அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலை பள்ளிகளில் ‘ஸ்மார்ட் வகுப்பறை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. NIIT அறக்கட்டளையுடன் இணைந்து இந்த திட்டம், மாணவர்களுக்கு டிஜிட்டல் மற்றும் IT திறன்களை கற்பிப்பதை நோக்கமாக கொண்டு, ஆசிரியர்களுக்கு அவர்களின் கற்பித்தல் முறைகளில் டிஜிட்டல் கருவிகளை திறம்பட ஒருங்கிணைக்கும் வகையிலும், மாணவர்கள் கல்வியை ஈடுபாட்டுடன் கற்க உதவும் வகையில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காணொளி காட்சி மூலமாக துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து காணொளி காட்சி மூலமாக மாணவர்களிடையே பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் அனைவரும் பள்ளிகளுக்கு தவறாமல் வரவேண்டும் என்றும், டிஜிட்டல் வகுப்பறை மூலமாக தங்களின் கல்வித் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

ஆசிரியர் தலைமையிலான ஸ்மார்ட் வகுப்பறையில் கணினி, எல்இடி ஸ்மார்ட் டிவி. பிரிண்டர் மற்றும் டிஜிட்டல் கற்றல் தரவுகளை கொண்ட ஆன்ட்ராய்டு பெட்டி ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் ஆசிரியர்களின் டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்த உதவும் எனவும், தங்கள் திறனை மேம்படுத்தி கொள்ள ஆசிரியர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

CATEGORIES
TAGS