இன்றுடன்+2 முக்கிய பாடங்களுக்கான பொதுத்தேர்வு நிறைவு!! மகிழ்ச்சியில் மாணவர்கள்!!
இன்றுடன்+2 முக்கிய பாடங்களுக்கான பொதுத்தேர்வு நிறைவு!! மகிழ்ச்சியில் மாணவர்கள்!!
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக 1 முதல் 12ம் வகுப்பு வரை ஆண்டுத் தேர்வுகள் நடத்தப்படவில்லை. நடப்பாண்டில் பிப்ரவரி முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புக்கள் நடத்தப்பட்டன. கோடை வெயில் அளவுக்கு அதிகமாக இருந்ததால் 1 முதல் 9ம் வகுப்பு வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 5ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் 12ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த, 7,534 பள்ளிகளைச் சேர்ந்த, 8.85 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். அவர்களில், 32 ஆயிரம் பேர் தேர்வு எழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், வணிகவியல், பொருளியல், புள்ளியியல் உட்பட 80 சதவீத பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு விட்டன.
உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் பொறியியல் பாடங்களுக்கான தேர்வுகள் இன்று நடைபெற்று வருகின்றன. இதனால் முக்கிய பாடத்தேர்வுகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதன் பிறகு மே 28 ம் தேதி தொழிற்படிப்புக்கான தேர்வுகள் மட்டும் நடைபெறவுள்ளது. அதே நேரத்தில் மாணவர்களின் விடைத்தாள்கள் மண்டல திருத்துதல் மையங்களுக்கு விடைத்தாள்களை கொண்டு செல்லும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் 23ல் வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.