இபிஎஸ் வழக்கு – உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…

எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், அந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளது. மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த டெண்டர் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணை செய்ய வேண்டியதில்லை எனவும், இந்த வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் தொடர்ந்து விசாரிக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
CATEGORIES Uncategorized