இரண்டு மாதங்களாக சாலை ஓரத்தில் கூட்டு குடிநீர் குழாய் உடைந்து வீணாக செல்லும் தண்ணீர் இதனால் தொழில் பாதிப்பதாக தொழிலாளர்கள் வேதனை.

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி அருகிலுள்ள இடைகால் விலக்கு பகுதியில் சாலை ஓரத்தில் ஆய்க்குடி கூட்டு குடிநீர் திட்ட தண்ணீர் குழாய் உடைந்து கடந்த இரண்டு மாதங்களாக தண்ணீர் வீணாக செல்கிறது.
மேலும் உடைந்த தண்ணீர் செல்லும் இடத்தில் வாகன பழுது பார்க்கும் கடை, சலூன் கடை, இருசக்கர வாகன உதிரி பாகங்கள் விற்பனை கடை மற்றும் ஹோட்டல் உட்பட பல கடைகள் உள்ளது.
உடைந்த தண்ணீர் கடை முன்பு செல்வதால் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது
மேலும் தண்ணீர் வெளியேறும் இடம் அம்பாசமுத்திரம் – ஆலங்குளம் செல்லும் பிரதான சாலையாக உள்ளது.
இதுகுறித்து கடை உரிமையாளர்கள் அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறப்படுகிறது.
எனவே உடனடியாக இந்த தண்ணீர் குழாய் உடைப்பை சரி செய்ய அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
CATEGORIES திருநெல்வேலி