BREAKING NEWS

இரவில் போடி மெட்டு வழியே ரேஷன் அரிசி கடத்திய துணிகர கும்பல். வாகனங்களை கைப்பற்றி காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை…

இரவில் போடி மெட்டு வழியே ரேஷன் அரிசி கடத்திய துணிகர கும்பல். வாகனங்களை கைப்பற்றி காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை…

செய்தியாளர் மு. பிரதீப்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர், கம்பம் மெட்டு, குமுளி மெட்டு சாலைகளில் சபரிமலை ஐயப்ப பக்தர்களின் போக்குவரத்து அதிகரிப்பால் இரவில் போடி மெட்டு வழியே ரேஷன் அரிசி கடத்திய துணிகர கும்பல். வாகனங்களை கைப்பற்றி காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை..

 

தேனி மாவட்டம் போடியில் இருந்து கேரளாவிற்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் முந்தல் சோதனை சாவடியில் இரவு 8 மணி அளவில் கடத்தல் சிறப்பு தனிப்படை காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 

அப்பொழுது போடி இரட்டை வாய்க்கால் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக அதிவேகத்தில் கேரளா நோக்கி பயணித்த ஜீப் ஒன்றினை பின்னால் துரத்திச் சென்ற காவல்துறையினர் முந்தல் சோதனை சாவடி முன்பாக வாகனத்தை வழிமறித்து நிறுத்தினர்.

 

 

ஜீப்புடன் இரண்டு இருசக்கர வாகனத்தில் நான்கு நபர்கள் வழிமறித்தவர்கள் காவல்துறையினர் என்று தெரியாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொழுது

தனிப்படை காவல் சார்பு ஆய்வாளர் கதிரேசன் தலைமையிலான காவல்துறையினர் ஜீப்பையும் இரண்டு இருசக்கர வாகனத்தையும் ஆய்வு மேற்கொண்டதில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படும் ரேஷன் அரிசி மூடைகள் இருப்பதை கண்டறிந்தனர்.

 

இதைத்தொடர்ந்து ஐந்து நபர்களையும் கைது செய்து அவர்கள் பயணித்த இரண்டு இருசக்கர வாகனம் மற்றும் ஜீப்பினை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில். கம்பம் மெட்டு குமுளி மெட்டு பகுதிகளில் ஐயப்ப பக்தர்கள் 24 மணி நேரமும் பயணிப்பதால் காவல்துறையின் கெடுபிடி அப்பகுதியில் அதிகம் உள்ளதன் காரணமாக போடி மெட்டு மலைச்சாலை வழியாக ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது.

 

இந்தக் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் கம்பம் புதுப்பட்டி சேர்ந்த செல்லப்பாண்டி, பாரதி, சக்தி குமார், சில்ல மரத்துப்பட்டியைச் சேர்ந்த வனத்துரை, வீரபாண்டி, ஆகியோர் என்பதும் இவர்கள் தொடர்ந்து அரிசி கடத்தலில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதும் இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளது என தெரிய வந்தது.

 

இதைத் தொடர்ந்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் 2டன் அளவிலான46 மூடை ரேஷன் அரிசியுடன் கடத்தல் வாகனங்கள் மற்றும் ஐந்து நபர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.

பொதுமக்கள் வாழ்வாதார பயன்பாட்டிற்கு அரசு இலவசமாக வழங்கும் அரிசி கேரளாவிற்கு கடத்தப்படுவது தொடர்ந்து நடைபெறுவதை இரும்புக் கரம் கொண்டு தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

CATEGORIES
TAGS