BREAKING NEWS

இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து ஆம்னி பேருந்தின் கண்ணாடியை உடைத்த மர்மநபர்களை அதிரடியாக கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து ஆம்னி பேருந்தின் கண்ணாடியை உடைத்த மர்மநபர்களை அதிரடியாக கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சென்னை TO சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் A.குமாரமங்கலம் காப்புக்காடு பகுதியில் கடந்த 09.06.2023 மற்றும் 30.06.2023-ந் தேதிகளில் நள்ளிரவு நேரத்தில் சாலையில் செல்லும் ஆம்னி பேருந்துகள் மற்றும் தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகளின் கண்ணாடியை மர்ம நபர்கள் அடுத்தடுத்து கற்கலைக் கொண்டு உடத்தது சம்மந்தமாக உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் இது சம்மந்தமாக குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடிவந்தனர்.

 

உளுந்தூர்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷ், திருநாவலூர் காவல் ஆய்வாளர் அசோகன், காவல் உதவி ஆய்வாளர்கள் திருமால், ஆனந்தராசு, அலெக்ஸ், பசலைராஜ் மற்றும் காவலர்கள் சம்பவ இடம் சென்று தடயங்களை சேகரித்தும், CCTV காட்சிகள் மற்றும் மாவட்ட சைபர் செல் உதவியோடு தீவிரமாக விசாரணை செய்ததில் உளுந்தூர்பேட்டை தாலுக்கா, சிறுபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 1).குமரேசன்(33) த/பெ சிங்காரவேல்,  2).சந்துரு(21) த/பெ கொளஞ்சி,

 

எடைக்கல் கிராமத்தைச் சேர்ந்த 3)ஜோதி(29) த/பெ சன்னியாசி, 4). ஒரு இளஞ்சிறார் மற்றும் சிலர் ஒன்று சேர்ந்து இரவு நேரத்தில் சிறுபாக்கம் ஏரிக்கு மீன்பிடிக்க சென்றதாகவும் அப்போது தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஆம்னி பேருந்துகள் மற்றும் தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகளின் கண்ணாடியை கல்லை கொண்டு தாக்கி உடைத்தது தெரியவரவே மேற்படி குற்றச்சம்பவத்தில் ஈடுப்பட்ட குமரேசன், ஜோதி, சந்துரு ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கும், இளஞ்சிறார் ஒருவரை அரசு கூர்நோக்க இல்லத்திற்கும் அனுப்பிவைத்தனர்.

 

மேலும் இக்குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளை கைதுசெய்ய தனிப்படை காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். இவ்வழக்கில் எவ்வித துப்பும் கிடைக்காமல் இருந்த போதும் விசாரணையை தீவிரபடுத்தி சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்த தனிப்படையினருக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டுக்களை தெரிவித்தார்.

CATEGORIES
TAGS