இரவு நேரத்தில் மணல் திருட்டை தடுக்கச் சென்ற பழவூர் காவல் உதவி ஆய்வாளருக்கு அரிவாள் வெட்டு.அண்ணன் தம்பி இருவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது.
நெல்லை செய்தியாளர் மணிகண்டன்.
நெல்லை மாவட்டம் பழவூர் காவல் நிலைய ஆய்வாளர் பார்த்திபன் மற்றும் போலீசார் நேற்று இரவு வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர். அப்போது விஸ்வநாதபுரம் கூடங்குளம் ரோட்டில் வேகமாக சென்ற டெம்போ ஒன்றை வழி மறித்தபோது நிற்காமல் சென்றது.
அப்போது போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். அப்போது அதில் திருட்டுத்தனமாக மணல் ஏற்றி சென்றது தெரிய வந்தது. இது குறித்து இருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும்போது அவர்கள் உதவி ஆய்வாளர் பார்த்திபனை கைகளால தாக்கியுள்ளனர்.
இதனால் சுதாரித்துக் கொண்ட போலீசார் அவர்கள் இருவரும் மடக்கி பிடித்து டெம்போவை பறிமுதல் செய்து கூடங்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து உதவி ஆய்வாளர் பார்த்திபன் அளித்த புகாரின் பேரில் கூடங்குளம் போலீசார் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் (307) கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து ஆவரைகுளத்தை சேர்ந்த அண்ணன் தம்பியான சங்கர், மணிகண்டன் இருவரையும் கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.