இராஜபாளையத்தில் பெங்களூரில் இருந்து கடத்திவரப்பட்ட 175 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை வருகின்றனர்..
இராஜபாளையத்தில் பெங்களூரில் இருந்து கடத்திவரப்பட்ட 175 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை வருகின்றன
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் பெங்களூரில் இருந்து கடத்தி வரைபட்ட 175 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் அண்டை மாநிலமான கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்டு பரவலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இதனை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசமூர்த்தி என் உத்தரவின் பெயரில் இராஜபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரீத்தி தலைமையிலான வடக்கு காவல் நிலைய போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது மதுரை – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து இராஜபாளையம் நோக்கி வந்த ஒரு காரில் இருந்து மற்றொரு காருக்கு பார்சல்களை மாற்றம் செய்து கொண்டிருந்த நபர்களை கண்காணித்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பெங்களூரைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 175 கிலோ குட்கா பொருட்களை துத்துக்குடி மாவட்டம் கலிங்கப்பட்டிக்கு கொண்டு செல்வதற்காக மற்றொரு காரில் 175 கிலோ குட்கா பார்சல்களை ஏற்றிக் கொண்டு தெரிய வந்தது.இதனையடுத்து மற்றொரு காரில் வந்து பார்சல்களை பெற்றுக் கொண்டிருந்த நவநீதன். இசக்கிமுத்து மற்றும் ராமச்சந்திரன் ஆகியோரை கைது செய்த வடக்கு காவல் நிலைய காவல்துறையினர் பெங்களூரில் இருந்து ராமச்சந்திரன் உடன் வந்து தப்பி ஓடிய இருளப்பன் தேடி வருகின்றனர்.
செய்தியாளர் ம.வெள்ளானைப்பாண்டியன்.