இராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி சார்பில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் அமைச்சர் ஆர்.காந்தி துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.வளர்மதி, இ.ஆ.ப., அவர்கள் தலைமை தாங்கினார்.
இராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் 2022-23 -ன் கீழ் 7 ஊராட்சி ஒன்றியங்களில் தேர்வு செய்யப்பட்ட 104 ஊரக சாலைப்பணிகள் 121.326 கி.மீ நீளத்திற்கு மேம்பாடு செய்ய ரூபாய்.50.82 கோடி மதிப்பீட்டில் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் முடிக்கப்பட்டுள்ளது.
இப்பணிகளை மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் இன்று (01.06.2023) இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியம் வன்னிவேடு ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.48.25 இலட்சம் மதிப்பீட்டில் தேவதானம் முதல் கீழ்தேவதானம் வரையிலான ஒரு கிலோமீட்டர் சாலை பணிகளுக்கு பூமி பூஜையிட்டு பணியினை துவக்கி வைத்தார்கள்.
இத்திட்டத்தில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் 2022-23 ன் கீழ் அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்தில் 22 சாலைகள் 17.30 கி.மீ நீளத்திற்கு ரூ.822.99 இலட்சம் மதிப்பீட்டிலும், ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் 9 சாலைகள் 15.14 கி.மீ நீளத்திற்கு ரூ.638.90 இலட்சம் மதிப்பீட்டிலும், காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் 7 சாலைகள் 13.5 கி.மீ நீளத்திற்கு ரூ.560.93 இலட்சம் மதிப்பீட்டிலும், நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் 14 சாலைகள் 18.23 கி.மீ நீளத்திற்கு ரூ.712.08 இலட்சம் மதிப்பீட்டிலும்,
வாலாஜா ஊராட்சி ஒன்றியத்தில் 16 சாலைகள் 14.86 கி.மீ நீளத்திற்கு ரூ.734.68 இலட்சம் மதிப்பீட்டிலும், திமிரி ஊராட்சி ஒன்றியத்தில் 24 சாலைகள் 23.76 கி.மீ நீளத்திற்கு ரூ.905.69 இலட்சம் மதிப்பீட்டிலும், சோளிங்கர் ஊராட்சி ஒன்றியத்தில் 12 சாலைகள் 18.54 கி.மீ நீளத்திற்கு ரூ.706.43 இலட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தமாக 7 ஊராட்சி ஒன்றியங்களில் 104 சாலைகள் 121.326 கி.மீ. நீளத்திற்கு ரூ.50.82 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்படவுள்ளது.
மேலும் இத்திட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்களில் தேர்வு செய்யப்பட்ட 24 ஊரக சாலைகளில் 24.89 கி.மீ நீளத்திற்கு மேம்பாடு பணிகளை மேற்கொள்ள ரூபாய்.1500/இலட்சம் மதிப்பீட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஒப்பந்த பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது.முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் 2022-23 ன் கீழ் அமைக்கப்படும்,
ஊரக சாலைகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தரமானதாகவும், நீண்ட காலம் பயன்தரும் வகையிலும் 6 மீட்டர் முதல் 7.50 மீட்டர் அகலமுள்ள மண் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும், 3.75 மீ அகலத்திற்கு வண்டிப்பாதை ஜல்லி அடுக்குகள் மற்றும் 150 மி.மீ உயரம் வரையில் WMM அமைக்கப்படும், 30 மி.மீ உயரம் வரையில் தார் அடுக்குகள் போடப்படும், 3 முதல் 3.5 சதவீதம் வரையில் கேம்பர், சோல்டர், ஒன்றரை (1 %) அல்லது 2:1 சாய்வுடன் அமைக்கப்படுகிறது.
இச்சாலைகள் 5 வருடம் பராமரிப்பிற்காக பராமரிப்புச் செலவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பராமரிப்புப் பணிகளில் மழை காலத்திற்கு பின்னர் செடிகள் மற்றும் புதர்களை நீக்குதல், மழை நீர் மண்அரிப்புகளை சரிசெய்தல், தேவைப்படும் பொழுது சாலையின் இருபுறமும் மண் சமம் செய்தல், சாலையில் ஏற்படும் பள்ளங்கள் மற்றும் விரிசல்களை சரிசெய்தல், ஆண்டிற்கு இருமுறை சாலையோர வடிகால் வசதிகளை பராமரித்தல், சிறுபாலங்களை பராமரித்தல் போன்ற பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
தரை மட்டம் கேம்பர் 3 – 3.55 மண் வேலை சாலையின் விவரங்கள் சாலையின் அகலம் 6மீ-7.5மீ வண்டிப் பாதை 3.75மீ 4.05மீ 30 மி.மீ தள் அடுக்கு 150 மி.மீWMM அடுக்கு சோல்டர் 1V/ v2 (அ) 2:1 சாய்வு சாலையின் மாதிரி குறுக்கு வெட்டு தரை மட்டம்.
இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை திருமதி.க.லோகநாயகி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் திருமதி.ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றியக் குழு தலைவர் சே.வெங்கட்ரமணன், ஊரக வளர்ச்சி செயற் பொறியாளர் முத்துசாமி, ஒன்றியக்குழு துணைத் தலைவர் திரு.இராதாகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் திருமதி.மாலதி கணேசன், செல்வம், ஒன்றியக் குழு உறுப்பினர் திருமதி.ராணி, ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.கற்பகராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார், உதவி செயற்பொறியாளர் தனசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.