இருசக்கர வாகனங்களில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது – 1 கிலோ 400 கிராம் கஞ்சா மற்றும் 2 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்.
தூத்துக்குடி மாவட்டம்:
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சிவசுப்பு மேற்பார்வையில் தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் ஜூடி மற்றும் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் நேற்று (21.03.2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது,
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகில் இருசக்கர வாகனங்களில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் தூத்துக்குடி தாளமுத்துநகர் பாலதண்டாயுத நகரை சேர்ந்தவர்களான தமிழரசன் மகன் ஜெயேந்திரன் (24) மற்றும் முத்துப்பாண்டி மகன் ரமேஷ் கண்ணன் (20) ஆகியோர் என்பதும் அவர்கள் அப்பகுதியில் விற்பனைக்காக இரு சக்கர வாகனங்களில் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் எதிரிகளான ஜெயேந்திரன் மற்றும் ரமேஷ் கண்ணன் ஆகிய 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 1 கிலோ 400 கிராம் கஞ்சா மற்றும் 2 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி ஜெயேந்திரன் மீது ஏற்கனவே தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உட்பட 4 வழக்குகளும், எதிரி ரமேஷ் கண்ணன் மீது கொலை வழக்கு உட்பட 5 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.