BREAKING NEWS

இரும்புதலை அருகே புள்ள வாய்க்கால் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு.

இரும்புதலை அருகே புள்ள வாய்க்கால் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு.

புள்ள வாய்க்கால் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு.

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, இரும்புதலை, கோவத்தகுடி பகுதியின் முக்கிய பாசன வாய்க்கால் ஆக உள்ள புள்ள வாய்க்கால் பல வருடமாக தூர்வாராத காரணத்தால் புல், பூண்டுகள் மற்றும் வெங்காய தாரை. ஆகாய தாமரை செடிகள் ஏராளமாய் மண்டியுள்ளது. அதனால் பாசனத்திற்கு தண்ணீர் செல்ல பெருந்தடையாக இருந்து வருகிறது.

 

 

அதனால் புள்ள வாய்க்கால் மூலம் வடிகால் மற்றும் பாசன வசதிபெறக்கூடிய நிம்மேலி, கோவத்தகுடி, இரும்புதலை அதனை சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களில் உள்ள பலநூறு ஏக்கர் விவசாய நிலங்கள் முறையான பாசன வசதி பெறமுடியாமலும் மழை காலங்களில் மழைநீரை வடிய வைக்க முடியாமலும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகிறது.

 

விவசாய நிலங்களை பாதுகாக்க நடப்பு ஆண்டு மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பாகவே புள்ள வாய்க்காலை முழுமையாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

CATEGORIES
TAGS