இறந்தவரின் சடலத்தை ஆற்றின் ஷட்டரில் மேல் ஆபத்து பயணத்தில் எடுத்துச் செல்லும் பொதுமக்கள், கரணம் தப்பினால் மரணம், தரை பாலம் கட்டி தர கோரிக்கை
தஞ்சை மாவட்ட எல்லையான ஆவூர் நெடுவாசல் கிராமத்தில் (திருவாரூர் மாவட்டம்) நேற்று தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் முரளிதாஸ் (52) என்பவர் உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார்.
இதனையடுத்து அவரின் இறுதிச்சடங்கு நடைபெற்றது அப்போது இறந்தவரின் உடலை பாடை கட்டி தூக்கி கொண்டு சென்று அப்பகுதியில் உள்ள ஆற்றில் உள்ள ஷட்டர் மேற்புறத்தில் ஏறி ஆபத்துடன் எடுத்து சென்று வயல் வழியாக கொண்டு சென்று இறுதிச் சடங்கினை செய்தனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது கடந்த பல ஆண்டுகளாக இதே நிலைமை நீடித்து வருவதாகவும் இடுகாட்டிற்கு செல்வதற்கு தரைப்பாலம், சாலை வசதி ஆகியவை செய்து தர வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.
செங்குட்டுவன் பொதுமக்கள், நெடுவாசல்..
CATEGORIES Uncategorized
TAGS ஆபத்துடன் எடுத்துச் செல்லும் சடலம்ஆவூர் நெடுவாசல் கிராமம்குற்றம்தஞ்சாவூர் மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்