இறந்த குழந்தைக்கு நீதி கேட்டு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் பாஜக சார்பில் ஆர்பாட்டம்.

தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சிக்கு உட்பட்ட ஓடைப்பட்டி கிராமத்தில் உள்ள சமத்துவபுரத்தில் பூங்கா அமைப்பதற்காக தோண்டபட்ட பள்ளத்தில் சில தினங்களுக்கு முன்பு தவறி விழுந்து இறந்த 8 வயது குழந்தை ஹாசிணி ராணி மரணம் தொடர்பாக அவர்களின் தாய், தந்தையர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்தும்,

தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி அவர்களது தாய்,தந்தையர் உடன் பாஜக மாவட்ட தலைவர் பிசி பாண்டியன் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வாயில் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதன்பின்பு சிறுமியின் உயிர் இழப்பிற்கு அலட்சியமாக இருந்த ஓடைப்பட்டி பேரூராட்சி தலைவர் தனுஷ்கோடி, செயல் அலுவலர் கணேசன் மற்றும் ஒப்பந்ததாரர் செந்தில்குமார் ஆகியோர்களின் மீது துறை ரீதியான சட்ட நடவடிக்கை எடுக்கக் கூறியும்,

இறந்துபோன சிறுமியின் குடும்பத்தார்களுக்கு இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க கோரியும் அடங்கிய மனுவினை மாவட்ட ஆட்சியரை ஆட்சியரை சந்தித்து வழங்கினர்.
மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கும்போது பாஜக நகர தலைவர் மதிவாணன் மற்றும் ஊர் பொதுமக்கள் குழந்தையின் தகப்பனார், தாயார் மற்றும் அவர்களின் உறவினர்கள் உடன் இருந்தனர்.
