இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம்.,
ஆர்கே பேட்டை வட்டம் கொண்டாபுரம் காலனியில் சுமார் 20 ஆண்டு காலமாக வசித்து வரும் ஆதிதிராவிட மக்கள் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்,
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்களிடம் கேட்டபோது
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருவதாகவும்
ஒரே வீட்டில் இரண்டு அல்லது மூன்று குடும்பங்களாக வசித்து வருவதாகவும் அதனால்
கடும் இட நெருக்கடியில் வாழ்ந்துகொண்டு இருப்பதாகவும்
ஆகையால் எங்களுக்கு மாவட்ட ஆட்சியர் எங்கள் மனோ மீது நடவடிக்கை எடுத்து இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.மேலும்
மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் அதன் பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.