ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா திருக்கோயில்கள் திருவிழா ஆரம்பம்

ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா திருக்கோயில்கள் திருவிழா ஆரம்பம்
ஈரோடு பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், கடைசி மாரியம்மன் ஆகிய கோயில்களில் 19ஆம் தேதி பூச்சாட்டுதலும், 23ஆம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஏப்ரல் 2-ந் தேதி வாய்க்கால் மாரியம்மன் கோவில் குண்டம், பூ இறங்கும் விழா, மாவிளக்கு, கரகம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏப்ரல் 3-ந் தேதி பொங்கல் விழா, சின்ன மாரியம்மன் கோவிலில் இருந்து திருத்தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 4-ந் தேதி திருத்தேர் வடம் பிடித்தலுடன் ஸ்ரீ மாரியம்மன் மலர் பல்லாக்கில் திருவீதி உலா நடைபெறுகிறது. 5-ந் தேதி திருத்தேர் வடம் பிடித்து நிலை சேர்த்தல், காரைவாய்க்கால் மாரியம்மன் மலர் பல்லாக்கில் திருவீதி , சின்ன மாரியம்மன் மலர் பல்லாக்கில் திருவீதி உலா நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து ஏப்ரல் 6-ந் தேதி கம்பம் எடுத்தல் மற்றும் மஞ்சள் நீர் விழா நடைபெறுகிறது. ஏப்ரல் 7-ந் தேதி மறு பூஜை உடன் விழா நிறைவு பெறுகிறது.
அதன் அடிப்படையில் கம்பம் நடும் விழா நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.