BREAKING NEWS

ஈரோட்டில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை தடுக்க வலியுறுத்தி.

ஈரோட்டில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை தடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு ஹைவேஸ் காண்ட்ராக்டர் பெடரேசன், பில்டர்ஸ் அசோசியேசன் மற்றும் சிவில் என்ஜினியர்ஸ் அசோசியேசன் சார்பில் மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் பல பகுதிகளில் உள்ள கல் குவாரிகளிலிருந்து ஜல்லி, M. சாண்ட் போன்ற பொருட்கள் உற்பத்தி செய்து அரசு கட்டுமானம் சாலை பணி மற்றும் மக்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள மிக முக்கியமான மூலப்பொருட்களின் விலையை கிரஷர் மற்றும் குவாரி உரிமையாளர்கள் தன்னிச்சையாக சிண்டிகேட் அமைத்துக் கொண்டு மிகக் கடுமையாக 80 முதல் 90 சதவீதம் வரை விலை உயர்த்தி உள்ளனர். இதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி வலியுறுத்தி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனுவாக வழங்கினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

CATEGORIES
TAGS