BREAKING NEWS

ஈரோட்டில் போதை மாத்திரைகள் விற்ற பெண்கள் உள்பட 7 பேர் கைது.

ஈரோட்டில் போதை மாத்திரைகள் விற்ற பெண்கள் உள்பட 7 பேர் கைது.

ஈரோடு மதுவிலக்கு டி.எஸ்.பி. பவித்ரா தலைமையில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வீரப்பன்சத்திரம் கைகட்டிவலசு பகுதியில் 2 பெண் உள்பட 7 பேர் சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்தனர்.

 

 

அவர்களை பிடித்து விசாரணை நடத்தியபோது வீரப்பன்சத்திரம் கருப்பன் தெருவை சேர்ந்த சுதர்சன் (21), பெரியேசேமூர் பகுதி சேர்ந்த விக்னேஷ் (26), சூளை பகுதியைச் சேர்ந்த ஞானபிரகாஷ் (24), அதே பகுதியை சேர்ந்த இளங்கோ(25), வெட்டுக்காட்டுவலசு பகுதியைச் சேர்ந்த சமிம் பானு (20), ஆகியோர் என்பது தெரிய வந்தது. அவர்களை சோதனை செய்தபோது அவர்களிடமிருந்து போதை மாத்திரைகள், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

 

அவர்களிடமிருந்து 86 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா
2 மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து அவர்கள் 7 பேரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த கும்பலுடன் பலருக்கு தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளது அவர்கள் குறித்த விவரத்தையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.

Share this…

CATEGORIES
TAGS